இந்தியா

சைவப் பிரியர்களுக்காக மட்டும்... சொமேட்டோவில் புதிய சேவை!

இணையதள செய்திப்பிரிவு

உணவு டெலிவரி சேவையை வழங்கிவரும் சொமேட்டோ நிறுவனம் சைவப் பிரியர்களுக்காக மட்டும் புதிய சேவையை இன்று முதல் (மார்ச் 19) தொடங்கியுள்ளது.

சொமேட்டோ நிறுவனம் சிவப்பு நிறப் பெட்டியில் அனைத்து வகையான உணவுகளையும் (சைவம் / அசைவம்) பயனாளர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று வழங்கும் சேவையை வழங்கி வருகிறது.

இதனிடையே சைவப் பிரியர்களுக்களின் உணவு வழக்கத்திற்காக முழுவதும் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்யும் சேவையை சொமேட்டோ தொடங்கியுள்ளது. சைவ உணவு என்பதை குறிப்பதற்காக ஊழியர்களுக்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சொமேட்டோ நிறுவனம் வீடுதேடி உணவு வழங்கும் சேவையை வழங்கி வருகிறது.

சொமேட்டோ நிறுவனத்தில் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்ய புதிய நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள சொமேட்டோ நிறுவனர் தீபீந்தர் கோயல்,

''உலகில் அதிக எண்ணிக்கையிலான சைவ உணவுப்பிரியர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் கொடுத்த மதிப்பீடுகள், கருத்துகளின்படி உணவு எங்கு தயாரிக்கப்படுகிறது, எவ்வாறு கொண்டுவரப்படுகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

அவர்களின் உணவுமுறை விருப்பத்திற்கு ஏற்றவாறு சைவப்பிரியர்களுக்காக தற்போது சைவ உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 100% சைவ உணவை மட்டுமே விரும்பும் பயனாளர்களுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், பெறப்படும் ஆர்டர்கள், சைவ உணவகங்களில் மட்டுமே உணவு வாங்கப்படும். மாறாக அசைவ உணவகங்களில் தயாரிக்கப்படும் சைவ உணவுகள்கூட வாங்கப்படாது. பச்சை நிறப்பெட்டியில் இருக்கும் உணவுப் பொட்டலங்கள் சைவ உணவாக மட்டுமே இருக்கும்.

இந்த புதிய சேவையின் தொடக்கம் முழுக்க முழுக்க சைவ உணவை விரும்புபவர்களுக்காக மட்டுமே. அரசியல் அல்லது மத ரீதியான காரணங்களுக்கானதல்ல.

எதிர்காலத்தில் இதுபோன்று சிறப்பு டெலிவரி சேவைகளை இணைக்க உள்ளோம். உதாரணத்திற்கு கேக் விரும்பும் பயனாளர்களுக்கு கேக் வகை உணவுகளை, எந்தவித சேதாரமும் இல்லாமல் டெலிவரி செய்ய தனிச் சேவை தொடங்கும் திட்டமும் உள்ளது. கேக் சேதாரத்தைத் தவிர்க்க வாயு அடங்கியப் பெட்டி (hydraulic box) பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி நிறுவனம் கொடிகட்டி பறப்பதாகவும், தனது நிறுவனத்தின் நிலைத்தன்மையை காத்துக்கொள்ள சொமேட்டோ நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பலர் தீபிந்தர் கோயலின் பதிவில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சொமேட்டோ நிறுவனம் கடந்த மாதம் 225 சிறிய நகரங்களில் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் உணவு விநியோக வணிகம் குறைந்ததால் சொமேட்டோ நிறுவனம் ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT