மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தற்போது, குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், அமமுகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், வருகிற மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.