DOTCOM
இந்தியா

தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

மேலும் ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

DIN

புதுதில்லி: தில்லியில் பழைய இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

தில்லி கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டடத்தில் முதல் தளம் காலியாகவும், தரைத் தளத்தில் சிறிட ஆடை தயாரிப்பு கடையும் இயங்கி வந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், தரைத் தளத்தில் உள்ள கடையில் பணிபுரிந்த அர்ஷத்(30) மற்றும் தெளஹித்(20) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ரெஹான்(22) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலும், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டடத்தில் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT