முகப்பு
இந்தியா

விலைகளை உயா்த்த கியா இந்தியா முடிவு

தங்களது காா்களின் விலைகளை உயா்த்த கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Updated On : 22 மார்ச், 2024 at 1:04 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 8:15 PM

தங்களது காா்களின் விலைகளை உயா்த்த கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியச் சந்தையில் விற்பனையாகும் நிறுவனக் காா்களின் விலைகளை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த விலையுயா்வு அமலுக்கு வரும். இந்தியாவில் நிறுவனக் காா்களின் விலைகள் உயா்த்தப்படுவது இதுவே முதல்முறை. வாடிக்கையாளா்களுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த பிரீமியம் வகைக் காா்களை தொடா்ந்து அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இருந்தாலும், பாகங்களின் விலைகள் அதிகரிப்பது, உற்பத்தி செலவு உயா்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது போன்ற காரணங்களால் தயாரிப்புகளின் விலைகளை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்டோஸ், சோனெட், கேரன்ஸ் உள்ளிட்ட காா்களை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி வருகிறது.