லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு திலகமிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹோலி கொண்டாடினார்.
ஹோலி பண்டிகையை வட இந்தியாவில் மக்கள் இன்று (மார்ச். 24) விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் இன்று(மார்ச். 24) ராணுவ வீரர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று(மார்ச். 24) லடாக்கில் உள்ள டேஹ் ராணுவ தளத்துக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, “லடாக் என்பது சியாச்சின், கார்கில், பாரத மாதாவின் பூமி. லடாக் தேசிய தீர்மானத்தை குறிக்கிறது. நமது அரசியல் தலைநகரம் டெல்லி, நமது பொருளாதார தலைநகரம் மும்பை மற்றும் நமது தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூரு. அதேபோல, வீரத்தின் தலைநகரமாக லடாக் திகழ்கிறது” என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.