மேம்பாலத்தில் தீப்பற்றிய கார்: என்ன நடந்தது?
அசாத்புர் மேம்பாலத்தில் கார் தீக்கிரை: காயங்கள் இன்றி மீட்பு
தில்லி அசாத்புர் மண்டி பகுதியில் செவ்வாய்கிழமை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எஸ்யூவி வகையைச் சேர்ந்த கார் தீப்பற்றிய விவரம் அறிந்ததும் அங்கு மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்க 20 நிமிடங்கள் ஆனதாக அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
எதனால் கார் தீப்பற்றியது என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை.