காங்கிரஸ்  
இந்தியா

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

DIN

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 1,823 கோடி அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு வருமான வரி மற்றும் அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நான்கு ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்கை மறுதணிக்கை செய்ய தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான நிலையில், வருமான வரித்துறை இந்த புதிய நோட்டீஸை அனுப்பியிருக்கிறது.

வருமான வரித்துறை நோட்டீஸைை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT