பிரிஜ் பூஷண் சிங் 
இந்தியா

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

கைசர்கஞ்ச் தொகுதியில் புதிய பாஜக வேட்பாளர்

DIN

உத்தரப் பிரதேசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று முறை தொடர்ந்து தொகுதியின் எம்.பியாக இருந்த பிரிஜ் பூஷணுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கைசர்கஞ்சில் மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் அவரது குடும்பத்திற்குள்ளாகவே வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது அவரின் செல்வாக்கைக் காண்பிக்கிறது.

அதே நேரத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படுகிற ரே பரேலி தொகுதியில் தினேஷ் பிரதாப் சிங்கை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோா் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுப்பினர். தில்லி காவலர்கள் ஜுன் மாதம் இது தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT