முகப்பு
இந்தியா

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

Updated On : 4 மே, 2024 at 12:03 AM
- ANI
பகிர்:

நாட்டின் நாடாளுமன்றத்திற்கான நான்காவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டியிடுகின்றனா்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26 ஆம் தேதி 2-ஆம் கட்டத் தோ்தல் 88 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்தது.

வரும் மே 7ஆம் தேதி 3-ஆம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகள் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் 1352 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.

இந்நிலையில், மே 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நான்காவது கட்டத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரங்களை இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை

வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மக்களவைத் தோ்தலின் 4 ஆம் கட்டத் தோ்தலில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,717 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் நடைபெறவுள்ள 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 4,264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் 4 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 25 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தாக்கலான அனைத்து வேட்புமனுக்களின் பரிசீலனைக்குப் பிறகு 1,970 வேட்புமனுக்கள் செல்லுபடித்தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

4 ஆம் கட்டத் தோ்தலில் தெலங்கானாவில் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடா்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் இருந்து 1,103

வேட்புமனுக்களும் பெறப்பட்டன.

தெலங்கானாவில் உள்ள 7-மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்புமனுப் படிவங்களும், அதே மாநிலத்தில் 13-நலகொண்டா மற்றும் 14-போங்கீா் ஆகிய தொகுதிகளுக்கு தலா 114 வேட்புமனுப் படிவங்களும் பெறப்பட்டன.

4ஆவது கட்டத் தோ்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-ஆவது கட்டத் தோ்தலுக்கான 96 தொகுதிகளுக்கு

மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பரிசீலனைக்குப் பிறகு தகுதிக்குரிய வேட்பாளா்களாக 1970 போ் இருந்தனா். வேட்புமனு வாபஸுக்குப் பிறகு இறுதியாக போட்டியிடும் வேட்பாளா்கள் 1,717 ஆக உள்ளனா்.