பாட்னா: ரோஹிணி ஆச்சார்யா, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள், சரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் களமிறங்கியிருக்கிறார்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த லாலு பிரசாத் யாதவ் பலரும் நினைப்பது போல பிகார் முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அல்ல, அதேப் பகுதியைச் சேர்ந்த விவசாயி. லாலு பிரசாத் யாதவ் கட்டிசியன் பெயர் ராஷ்ட்ரிய ஜனசம்பவ்னா கட்சி. இவர் சரண் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலில், முக்கிய வேட்பாளர் பெயரில் பல வேட்பாளர்கள் களமிறங்குவது வரலாறுதான் என்றாலும், லாலு பிராசத் மகள் ரோஹிணி போட்டியிடும் தொகுதியில், அவரது தந்தை மற்றும் முக்கிய தலைவர் பெயரில் ஒருவர் போட்டியிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த லாலு பிரசாத் யாதவுக்கு பல வரலாறு உள்ளது. இவர் பல முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வருகிறாராம். இவர் ராப்ரி தேவியை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார். தற்போது அவரது மகளை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். ஆனால், நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன் என்கிறார்.
விவசாயி மற்றும் சமூக சேவகர் என்ற அடையாளத்தோடு இருக்கும் இவரை, பல முக்கிய கட்சிகளும் வாக்குகளைப் பிரிப்பவராகவே பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.