கோப்புப் படம் 
இந்தியா

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

DIN

புதுதில்லி: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை காரணமாக, மார்ச் மாதத்தில், தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 119.9 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 92.4 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இறுதியில் 119.775 கோடியிலிருந்து மார்ச் 2024 இறுதியில் 119.928 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோ 21.4 லட்சம் மொபைல் சந்தாதாரர்களையும், பார்தி ஏர்டெல் 17.5 லட்சம் வாடிக்கையாளர்களையும் இணைத்துள்ளன. இருப்பினும், வோடபோன் ஐடியா 6.8 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களையும், பிஎஸ்என்எல் 23.5 லட்சம் வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் 4,674 வாடிக்கையாளர்களையும் இழந்தன.

வயர்லைன் சந்தாதாரர்கள் பிரிவில் பிப்ரவரி 2024 இறுதியில் 3.31 கோடியிலிருந்து மார்ச் 2024 இறுதியில் 3.37 கோடியாக அதிகரித்தது். இந்த பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 3.99 லட்சம் புதிய சந்தாதாரர்களை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பாரதி ஏர்டெல் 2,06,042 புதிய சந்தாதாரர்களையும், வோடபோன் ஐடியா 39,713 பயனர்களையும் இணைத்தது.

மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் பிப்ரவரி 2024 இறுதியில் 91.67 கோடியிலிருந்து மார்ச் 2024 இறுதியில் 92.40 கோடியாக அதிகரித்து. இது மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.80 சதவிகிதமாக ஆகும். பிராட்பேண்ட் பிரிவில் வயர்லெஸ் இணைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பிப்ரவரியில் 87.64 கோடியிலிருந்து மார்ச் மாதத்தில் 88.32 கோடியாக உயர்ந்துள்ளது.

வயர்டு பிராட்பேண்ட் இணைப்புகள் பிப்ரவரியில் 3.94 கோடியிலிருந்து மார்ச் மாதத்தில் 1.52 சதவிகிதம் அதிகரித்து 4.06 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT