முகப்பு
கோப்புப் படம்.
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

Updated On : 4 மே, 2024 at 4:05 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று சென்றுகொண்டிருந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த வாகனம் உட்பட இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தன.

மேலும் அப்பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பாதுகாப்பு வாகனங்கள், சனை உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ​​சசிதர் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →