டாக்ஸி சேவை நிறுவனமான ஊபர் அதன் வாடிக்கையாளர்களுக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் ஊபரின் ஓட்டுநர்கள் போலியான செல்பேசி திரையைக் காட்டி கட்டண தொகையை விட அதிக பணம் பெறுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து ஊபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊபர் பயணத்திற்குப் பிறகு எவ்வளவு பணம் ஓட்டுநருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஓட்டுநரின் செல்பேசியில் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசி செயலியிலும் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-ஊபர் செயலி வழியாக பயணத்திற்கான அழைப்பு கொடுத்த பின்னர் செயலியில் உள்ள வாகன எண்ணும் வாடிக்கையாளரை ஏற்றிச் செல்ல வந்த வாகன எண்ணும் பொருந்துகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
-பயணத்துக்கு முன்பு 4 இலக்க எண் உறுதி செய்யப்பட்டதையும் பார்க்க வேண்டும்
-இறங்க வேண்டிய இடத்தை அடைந்ததும் ஓட்டுநரின் திரையில் காண்பிக்கும் கட்டணமும் செயலியில் காண்பிக்கும் கட்டணமும் ஒரே போல இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- செயலியில் காட்டுவதை விட ஓட்டுநர் திரையில் கட்டணம் அதிகமாக காட்டினால் ஓட்டுநரை ரிஃப்ரேஷ் செய்யுமாறு கேட்க வேண்டும்.
-அப்போதும் வித்தியாசம் இருந்தால் ஊபர் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக வேண்டும் என ஊபர் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.