இந்தியா

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோயில் நடை மே 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

DIN

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோயில் நடை மே 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத் தரிசித்துச் செல்கின்றனர்.

இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், மே மாதம் 10-ம் தேதி காலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில்ர குழுத் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் கோயில் திறக்கப்படவுள்ளதையடுத்து அதற்கான சிறப்புப் பூஜை வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. கடந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT