மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார்.
கலபுர்கி தொகுதியில் ராதாகிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பாஜக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.