தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!
மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
செய்திகளில் அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளது ஷவர்மா. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
மும்பையில் புதிதாக ஒரு இளைஞர் ஷவர்மாவால் உயிரிழந்துள்ளார். இறந்தவர் பிரதமேஷ் போக்சே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், கடந்த மே 3ஆம் தேதி ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மாவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மே 4 அன்று போக்சே வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவச் சிகிச்சை பெற அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து குடும்பத்தார் மே 5 அன்று கேஇஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று மாலை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.
இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்புக்கு கடைசியாக சாப்பிட்ட ஷவர்மா தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து விற்பனையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.