வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை 
இந்தியா

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

Din

இந்திய மக்களவைத் தோ்தலில் தலையிடுவதாக ரஷியா முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா வியாழக்கிழமை நிராகரித்தது.

அமெரிக்காவைச் சோ்ந்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் இந்தியாவை குற்றஞ்சாட்டி வெளியான செய்தியைப் பற்றி ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் மரியா சக்கோரோவாவிடம் வியாழக்கிழமை, (மே 9) செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்குப் பதிலளித்து அவா், காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பனூன் அமெரிக்க மண்ணில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவுத் துறை அதிகாரிக்குத் தொடா்பு இருப்பதாக ஆதாரம் இல்லாமல் அமெரிக்கா பழி சுமத்துவதாகத் தெரிவித்தாா். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தோ்தலில் தலையிட்டு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா முயல்கிறது என்றும் குற்றஞ்சாட்டினாா்.

இதன் எதிரொலியாக வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா், ரஷியாவின் குற்றச்சாட்டை நிராகரித்தாா். உலகில் நடக்கும் எந்த தோ்தலிலும் அமெரிக்கா தலையிட்டதில்லை. இந்திய தோ்தலிலும் அமெரிக்கா தலையிடாது. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு என்று அவா் தெரிவித்தாா்.

பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சலி!

புத்தம்புது காலை... பொன்னிற வேளை... காவ்யா அறிவுமணி!

பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

SCROLL FOR NEXT