சந்திரபாபு நாயுடு 
இந்தியா

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு பேச்சு

நாட்டுக்கு அவர் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து சந்திரபாபு நாயுடு பேச்சு.

DIN

வாரணாசி: வாராணசி தொகுதியில் பிரதமர நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்வது, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று வர்ணித்திருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டுக்கு அவர் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். மிகவும் புனிதமான நகரம். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கவிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த நாட்டுக்கு அவர் தேவை. உலகளவில் இந்தியா மிகப்பெரிய பங்காற்றவிருக்கிறது என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் நிலைத்தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்திருக்கிறார். அவருடன் இணைந்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெறும். அதனை நான் உறுதியோடு சொல்கிறேன். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே நடைபெறும். ஆந்திரத்தில் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியே அனைத்துத் தொகுதிகளிலும் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

ஸ்குவிட் கேம்.. ‘நான் ரெடி’ -ரெபா!

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்: இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன்!

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!

3 ரோஸஸ்... ஆஞ்சல் முஞ்சால்!

SCROLL FOR NEXT