முகப்பு
இந்தியா

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் அதிலிருந்த பெண் நோயாளி கருகி உயிரிழந்தார்.

Updated On : 14 மே, 2024 at 6:22 AM
பகிர்:

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் அதிலிருந்த பெண் நோயாளி கருகி உயிரிழந்தார்.

இறந்த நோயாளி சுலோச்சனா(57) அவசர அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது இந்த விபத்து ஏற்பட்டது.

அதிவேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் பெண் நோயாளி, ஓட்டுநர் மற்றும் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வாகனத்தில் இருந்தனர்.

Advertisement

மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஆனால் நோயாளி வாகனத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments