இந்தியா

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

லிஃப்டில் நடந்த கொடூரம்: வளர்ப்பு நாய் மீது தாக்குதல்

DIN

குடியிருப்பு அடுக்கக லிஃப்ட் ஒன்றில் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை சரமாரியாக தாக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடியோவில் வளர்ப்பு நாயான கோல்டன் ரிடீவரை, அதன் கழிவை அள்ளும் இரும்பு கரண்டி கொண்டு தலையில் தொடர்ச்சியாக ஒருவர் தாக்குகிறார். அதன் பிறகு தன் கைகளாலும் தாக்குகிறார்.

இந்த விடியோ ஹரியாணா, குருகிராமில் உள்ள செக்டர் 54-ன் ஆர்சிட் கார்டன்ஸ் குடியிருப்பு அடுக்ககத்தின் லிஃப்ட் சிசிடிவி என தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக வலைத்தள பயனர்கள் கோரியுள்ளனர்.

இது போன்ற வளர்ப்பு பிராணிகளை தாக்கும் சம்பவம் தொடந்துவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.

நொய்டாவில் மாடிக் கட்டடத்தில் இருந்து நாயை தூக்கி வீசி கொன்ற விடியோ சமீபத்தில் வைரலானது. விலங்குகள் நல அமைப்பான பீட்டா, அந்த நபரை கைது செய்ய தகவல் தருவோருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT