இந்தியா

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

ANI

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதைக் குறிப்பிட்ட கபில் சிபல், 400 தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகைளை மீட்க மாட்டீர்களா? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல், தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த கபில் சிபல், அமித் ஷா சொல்கிறார், நாங்கள் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக்கொண்டு வருவோம் என்று. ஒருவேளை, அவ்வளவு தொகுதிகளில் வெல்லவில்லை என்றால், அதை மீட்டுக் கொண்டு வர மாட்டீர்களா? முதலில் நீங்கள் சீனா எடுத்துக்கொண்டுவிட்ட 4000 கிலோ மீட்டர் தொலைவு நிலப்பகுதியை மீட்டுக் கொண்டு வாருங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது ஆட்சேபனைக்குரியது என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றிய அறிவு இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்க மாட்டார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT