வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !
குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13 - ஆம் தேதி நடைபெற்றது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில்,நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தன் குடும்பதினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரை கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பாபட்லா மக்களவைத் தொகுதி உறுப்பினர் நந்திகம் சுரெஷ், வீட்டுவசதி துறை அமைச்சர் ஜோகி ரமேஷ் மற்றும் பிற ஆளுங்கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.
Advertisement