கோப்புப்படம் 
இந்தியா

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

DIN

தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீடிக்கும்.

தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரிய அளவில் மழை கிடைக்காது என்றாலும், மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஒருநாள் முன்னதாக மே 31-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கணித்து இருந்தது.

இந்நிலையில், அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தென்மேற்குப் பருவமழை மாலத்தீவு மற்றும் கொமோரின் பகுதியின் சில பகுதிகளிலும், தெற்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள், தெற்கு அந்தமானின் சில பகுதிகளிலும் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT