பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நீண்ட நாட்களாக கனடா குடியுரிமை வைத்திருந்தார்.கடந்த ஆண்டு கனடா குடியுரிமையை கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமை கேட்டு விண்ணபித்திருந்தர்.அவருக்கு கடந்த ஆண்டு இந்திய குடியுரிமை வழங்கபட்ட நிலையில், இந்திய குடிமகனாக தனது முதல் வாக்கினை இன்று மும்பையில் பதிவு செய்தார்.
அவர் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது : இந்தியா வளர்ச்சியடையவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.எனவே அதை மனதில் வைத்து வாக்களித்தேன். மக்கள் தங்களுக்கு யார் சரியென்று படுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.வாக்குப்பதிவு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 49 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.