ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிர்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக அதிபர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் மலை முகடுகளில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. தொடர் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
15 மணி நேரம் கழித்தே விபத்து நடந்த இடத்தை மீட்புப்பட நெருங்கியது. வனம் மற்றும் மலைப் பகுதியில் கடும் போராட்டத்திற்கு பின் ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பாதுகாப்புக்கு சென்ற 2 ஹெலிகாப்டர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றபோதிலும் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
அதிபர் இப்ராஹிம் ரய்சியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் பலியாகினர். ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.