இந்தியா

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

DIN

பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

2023 - 2024ம் நிதியாண்டில் மட்டும் டிக்கெட் விற்பனையால் ரூ. 3,279.9 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் ரூ. 1,958.4 கோடி கிடைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய பிவிஆர் ஐநாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிதின் சூட், ''கடந்த ஆண்டில் மட்டும் உணவுப் பொருள் - குளிர்பானங்கள் விற்பனையால் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 1,618 கோடியாக இருந்தது.

இதேபோன்று டிக்கெட் மூலம் கிடைத்த வருவாயும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 2,751.4 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.3,279.9 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் ஹிட் படங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வெளியான நிலையில் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

நிதிசேவைகளை வழங்கிவரும் எல்ரா கேபிடல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கரண் டெளரானி இது குறித்து பேசியதாவது, ''மெட்ரோ மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் உள்ளதால், சினிமாவை பார்க்க வராதவரகளும் உணவுக்காக வருகை தருவது அதிகரித்துள்ளது. சோதனை அடிப்படையில் டெலிவரி சேவைகளையும் வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விற்பனை அதிகரித்ததற்கு இது முக்கிய காரணம்'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT