ஷாருக்கான் (கோப்பு படம்)
இந்தியா

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தனது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் செவ்வாய்க் கிழமையன்று அகமதாபாத் சென்று இருந்தார்.

நடிகர் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு கே டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT