ஹரியாணா மாநிலத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, டெம்போ வாகனத்தில் சென்றபடி மக்களிடம் உரையாடினார்.
அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
பிரதமரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியது மோடிக்கு எப்படி தெரியும்? முன் அனுபவம் உண்டா? அப்படி காங்கிரஸ் வாங்கியது என்றால் அமலாக்கத்துறை, சிபிஐயை விசாரணைக்கு அனுப்புங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹரியாணாவில் பிரசாரத்துக்கு இடையே ராகுல் காந்தி டெம்போவின் பின்புறம் நின்றபடி பயணித்துக் கொண்டே மக்களிடம் உரையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், “மோடியின் டெம்போ நியாயமற்றது, ஆனால் காங்கிரஸ் டெம்போ நியாயமானது” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹரியாணா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய ராகுல் காந்தி, ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை கிழித்து எறிவோம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.