வாக்குப்பதிவு 
இந்தியா

6-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்! மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பு!!

6-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்! மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பு!!

பிடிஐ

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் 11 மணி வரை சராசரியாக 25.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் மக்கள் காலை முதலே வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். இதனால் முற்பகல் 11 மணி நிலவரப்படி 36.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 மணி வரை பிகாரில் 23.67 சதவீதமும், ஹரியாணாவில் 22.09 சதவீதமும், ஜம்மு - காஷ்மீரில் 23.11 சதவீதமும் ஜார்க்கண்டில் 27.8 சதவீதமும் தில்லியில் 21.69 சதவீதமும் ஒடிசாவில் 21.3 சதவீதமும் உத்தரப்பிரதேசத்தில் 27.6 சதவீதமும் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 36.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாரில் 8 மக்களவைத் தொகுதிகளிலும் 11 மணி வரை 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு 1.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இன்று பிகாரில் நடக்கும் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகள் கிராமப் பகுதிகளாக அமைந்துள்ளன.

தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 11 மணி வரை 27.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக பஸ்தி தொகுதியில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் ஏற்கெனவே 4 தொகுதிகளுக்கு தோ்தல் நிறைவடைந்துவிட்டது. இறுதியாக அனந்த்நாக்-ரஜெளரி தொகுதிக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி வரை இங்கு 23.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்களில் கடும் வெயில் நிலவுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

SCROLL FOR NEXT