புதுதில்லி: மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக தலைநகர் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தில்லி உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தில்லி வாக்காளர்கள் மீண்டும் மோடி அரசு அமைய வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்குச்சாவடி மையத்தில் முதல் நபராக வாக்களித்ததை பாராட்டி அவருக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என 58 தொகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு (மே 25) வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தோ்தலில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 11.13 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இதில் ஆண் வாக்காளா்கள் 5.84 கோடி போ், பெண் வாக்காளா்கள் 5.29 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 5,120 போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11.4 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். வாக்குப்பதிவுக்குப் பிறகு தனது மை தடவிய விரலைக் காட்டி, வாக்குச்சாவடியின் 'முதல் ஆண் வாக்காளர்' என்பதை உயர்த்திக் காட்டினார்.
இந்த வாக்குச்சாவடியில் சாவடியில் நான்தான் முதல் ஆண் வாக்காளர். நாட்டுக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்பதால் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். தில்லி வாக்காளர்கள் மீண்டும் மோடி அரசு அமைய வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வாக்குச்சாவடி மையத்தில் முதல் நபராக வாக்களித்ததை பாராட்டி அவருக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
முன்னெப்போதும் இல்லாத இந்த போட்டிக் களம், பாஜகவுக்கு சவாலாக உள்ளது. தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இக்கட்சி களத்தில் உள்ளது. எதிரணியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.