கோப்புப் படம். 
இந்தியா

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

DIN

135 பேருடன் லடாக் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மீது பறவை மோதியதால் மீண்டும் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தில்லி விமான நிலையத்தில் இருந்து 135 பேருடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 10.30 மணியளவில் லடாக் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தின் எஞ்சின் 2ல் பறவை மோதியது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்தில் 11 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமானம் சாதாரணமாக தரையிறங்கியது, அவசர தரையிறக்கம் அல்ல என்று விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இதே வாரத்தில் துபையில் இருந்து மும்பை வந்த போயிங் 777 விமானத்தில் மோதி 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் அழிப்பு! எல்லைப் பாதுகாப்புப் படை

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT