தில்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை எவ்வளவு தெரியுமா?
தில்லியில் முங்கேஷ்பூர் பகுதியில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
வடக்கு மாநிலங்கள் கடும் வெப்ப அலையை சமீப நாள்களாக சந்தித்து வருகின்றன. தில்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக முங்கேஷ்பூர் பகுதியில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தானியங்கி வெப்பநிலை கண்காணிப்பு மையத்தின் (ஏடபிள்யூஎஸ்) அளவுகளை விட முங்கேஷ்பூர் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் பதிவான வெப்பநிலை அதிகமாக உள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லிக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது.
Advertisement
கடந்த சில தினங்களாக அதிகபட்ச வெப்பநிலையை ஏடபிள்யூஎஸ் பதிவு செய்துவருகிறது.
அதிகபட்ச வெப்பநிலை இதுவெனவும் வெப்ப மழை பெய்வதாகவும் பள்ளியின் துணை முதல்வர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் வெயில் இருந்தபோதும் வெப்ப அலை இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வவ்போது மழையும் பெய்துள்ளது. ஒராண்டுக்கு முன்பாக வெப்பகாலம் இத்தனை தண்டனைக்குரியதாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.