சபர்மதியில் காந்தி சிலைக்கு மலர் தூவும் பிரதமர் மோடி (கோப்புப் படம்) ANI
இந்தியா

திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

தேச விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தி குறித்து மோடி பேசியிருக்கிறார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேசத் தந்தை மகாத்மா காந்தி குறித்து பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி தற்போது விவாத பொருளாகியுள்ளது.

பிரதமர் மோடி ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் செவ்வாய்க்கிழமை ஒளிப்பரப்பாகியுள்ளது. அந்த காணொலியில் காந்தி குறித்து அவர் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நேர்காணலில், “மகாத்மா காந்தி சிறந்த மனிதர். இந்த 75 ஆண்டுகளில், உலகத்துக்கு மகாத்மா காந்தியை அறிமுகம் செய்வது நமது கடமையல்லவா? யாருக்கும் அவரை தெரியாது. 1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் காந்தி குறித்த படம் வந்த பிறகுதான் முதல்முறையாக காந்தி பற்றி ஆர்வம் எழுந்தது. நாம் அதை செய்யவில்லை. நம் நாடு செய்திருக்க வேண்டிய வேலை அது.

மகாத்மா காந்தியின் உலகளாவிய அங்கீகாரம் அவரது வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் அனைத்தும் திரைப்பட சித்தரிப்புகளால் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஒரு மோசமான நிலை இருந்தது. மகாத்மா காந்தியின் "காந்தி" என்ற திரைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது. அதன்பிறகே அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது. ஆனால் அந்த படத்தை நாம் எடுக்கவில்லை.

மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் முழுவதும் அறிந்திருக்கிறார்கள். காந்தி அவர்களை விடக் குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பிறகு இதைச் சொல்கிறேன். மகாத்மா காந்தி இந்தியாவில் பலவித பிரச்னைகளுக்கு தீர்வாக இருந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா- பிரிட்டனின் கூட்டுத் தயாரிப்பில், ரிச்சர்ட் அட்டன்பர்க் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘காந்தி’ திரைப்படம் நவம்பர் 30,1982-ல் இந்தியாவில் வெளியானது. அடுத்தடுத்த வாரங்களில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளியானது.

11 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 8 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கவிக் களஞ்சியம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் வரலாறு; பாகம்-1

வரப்பெற்றோம் (20-10-2025)

விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT