தில்லியில் மீண்டும் தீ விபத்து!
தில்லியில் போலீஸ் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 வாகனங்கள் எரிந்து நாசம்
இந்தியாதில்லியில் மீண்டும் தீ விபத்து!
தில்லியில் போலீஸ் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 வாகனங்கள் எரிந்து நாசம்
வடகிழக்கு தில்லியில் உள்ள வஜிராபாத் போலீஸ் பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 300 வாகனங்கள் வரையில் எரிந்து நாசமானதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் சுமார் 125 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி அசோக் குமார் ஜெய்ஸ்வால் கூறுகையில், ”மொத்தம் 14 தீயணைப்பு வாகனங்களில், 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 4000-க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில், சுமார் 125 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 175 இருசக்கர வாகனங்கள் என 300 வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன். தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்காவல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு இரண்டு சாத்தியமான காரணங்கள் இருக்கலாம்; யாராவது சிகரெட், பீடி துண்டுகளை வீசியிருக்கலாம், இதன் காரணமாக உலர்ந்த இலைகள் மற்றும் புதர்கள் தீப்பிடித்திருக்கலாம் அல்லது தன்னிச்சையான தீ காரணமாக இருக்கலாம், வாகனத்தின் பேட்டரிகளில் இருந்து வரும் தீப்பொறிகளும் கூட காரணமாக இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்