கோப்புப்படம் 
இந்தியா

புணே கார் விபத்து: மருத்துவர்களுக்கு ஜூன் 5 வரை போலீஸ் காவல்!

புணே கார் விபத்து சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்களை ஜூன் 5 வரை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

கடந்த மே 19-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புணேயில், 18 வயதுக்குள்பட்ட சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

புணேயில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட இருந்த நிலையில், அந்த ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. அதற்குப் பதிலாக மது அருந்தாத ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வைக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹல்னோா், பணியாளா் அதுல் காட்காம்ப்லே ஆகிய 3 பேரைக் காவல் துறை கைது செய்தது. சிறுவனின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை மாற்றிய முறைகேட்டில் மருத்துவா்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அந்த மருத்துவா்களை மகாராஷ்டிர அரசு புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் அந்த மருத்துவமனை முதல்வா் விநாயக் காலே கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவா் அஜய் தவாரே, தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹல்னோா், ஊழியா் அதுல் காட்காம்ப்ளே ஆகியோரை ஜூன் 5 ஆம் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க புணே மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT