இந்தியா

வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மாநிலத்தில் வெப்ப அலைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடகங்களில், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாகவே உயிர்பலி நேரிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனூப் குமார் தாந்த் அமர்வு, தமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய பேரிடராக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்குமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை மற்றும் குளிர் காற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பான பணிகளில் இறங்க வேண்டும், வெப்ப அலை மற்றும் குளிர்க்காற்றை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

SCROLL FOR NEXT