கோப்புப் படம். 
இந்தியா

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் பலி

DIN

உத்தரப் பிரதேசம் மிர்ஷாபூரில் அதிக வெப்பத்தால் தேர்தல் பணி பாதுகாப்பில் இருந்த 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

பாதுகாப்பு பணியில் இருந்த 23 பேரில் அதிக வெப்பத்தால் 6 பேர் பலியான நிலையில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அதிக வெப்பத்தால் பலியான 6 பாதுகாப்பு வீரர்களுக்கும் அதிக காய்ச்சல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பி.லால் கூறுகையில், "எங்களிடம் மொத்தம் 23 பாதுகாப்பு வீரர்கள் வந்துள்ளனர். 6 வீரர்கள் பலியாகினர். இரண்டு வீரர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். பலியானவர்களுக்கு அதிகபட்ச காய்ச்சல் இருந்தது. அவர்களின் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தது.

மூளைச்சாவு ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. அவர்கள் இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பே கீழே விழுந்துவிட்டார்கள். அவர்கள் தேர்தல் பணியில் இருந்தவர்கள் என்றார். உத்தரப் பிரதேச உள்பட வடக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்ப அலைக்கு இறப்புகளும் பதிவாகி வருகிறது. தலைநகர் தில்லியில் வரலாற்றில் முதல்முறையாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT