தில்லி முதல்வர் அதிஷி. கோப்புப்படம்.
இந்தியா

சத் பூஜை: நவ 7-ல் தில்லியில் பொது விடுமுறை அறிவிப்பு

தில்லியில் நவ 7-ஆம் தேதி சத் பூஜையையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் நவ 7-ஆம் தேதி சத் பூஜையையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத் பூஜை தீபாவளிக்கு ஆறு நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. மேலும், இது முக்கியமாக பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சத் பூஜையையொட்டி நவம்பர் 7-ம் தேதி தில்லியில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் சக்சேனா முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நவ 7-ஆம் தேதி தில்லிக்கு பொது விடுமுறை என்று முதல்வர் அதிஷி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சத் திருவிழாவிற்கு நவம்பர் 7 அன்று விடுமுறை அறிவிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் பூர்வாஞ்சல் நமது சகோதர சகோதரிகள் அனைவரும் விழாவை ஆடம்பரமாக கொண்டாடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த அறிக்கை தொடர்பான தனது கையெழுத்திட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT