குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!
குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 4 மற்றும் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதாரத் திருவிழாவையொட்டி மார்ச் 4 ஆம் தேதி (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 10 ஆம் தேதி (செவ்வாய்) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, மேற்குரிய நாள்களில் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகள் இருப்பின், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 7 மற்றும் மார்ச் 14 ஆகிய சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Local holidays for Kumari district on March 4th and 10th!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.