ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
ராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோயிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டினார். இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. பெரிய கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக இரண்டு நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு ராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழா வருகிற 21 மற்றும் 22 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சதய விழாவையொட்டி அக் 22. ஆம் தேதி ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Rajaraja Cholan's 1,041st Sataya Vizha: Local holiday declared for Thanjavur district on October 22.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.