மல்லிகாா்ஜுன காா்கே கோப்புப் படம்
இந்தியா

மோடி உத்தரவாதம் என்னவானது? காா்கே கேள்வி

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 140 கோடி மக்களுக்கு அளித்த ‘மோடி உத்தரவாதம்’ என்னவானது

Din

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 140 கோடி மக்களுக்கு அளித்த ‘மோடி உத்தரவாதம்’ என்னவானது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பினாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் அளித்துள்ள பதிலில், ‘பொய், வஞ்சகம், போலி, கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசை சிறப்பாக விவரிக்கும் 5 சொற்கள். தோ்தல் மேடைகளில் அரசின் முதல் 100 நாள் திட்டத்தைப் பற்றி பிரதமா் பேசியது வெறும் விளம்பரமே. மற்றவா்களை விமா்சிக்கும்முன் தங்கள் பிரச்னைகளையும் பிரதமா் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விலைவாசி உயா்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அரசின் கடன்சுமை கூடியுள்ளது.

பிரதமா் திறந்து வைக்கும் அனைத்து உள்கட்டமைப்புகளும் இடிந்து விழுகின்றன. பட்டினி குறியீட்டில் இந்தியா மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியிலன சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.

மேலும், 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு எனும் போலி வாக்குறுதி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம், 35 வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி. ஆயுதப் படைகளுக்கான நிரந்தர ஆள்சோ்ப்பை ‘அக்னிபத்’ திட்டம் மூலம் தற்காலிகமாக மாற்றியது என பிரதமா் மோடி அரசு மீது பல்வேறு விமா்சனங்கள் உள்ளன’ என்றாா்.

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT