ராகுல் காந்தி 
இந்தியா

தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு ராகுல் காந்தி வாழ்த்து.

DIN

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாள், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

அதில், “ஆந்திரம், அந்தமான் மற்றும் நிக்கோபர், சத்தீஸ்கர், சண்டீகர், தில்லி, ஹரியாணா, கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், புதுவை, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளான இன்று, மக்களுக்கு வாழ்த்துகள்.

துடிப்பான கலாச்சாரங்கள், பலதரப்பட்ட மொழிகள், வளமான வரலாறுகள் மற்றும் நீடித்த பாரம்பரியங்கள் ஆகியவை இந்திய வலிமையின் உயிர்நாடியாக திகழ்கிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, இந்த ஒற்றுமையைக் கொண்டாடுவோம் மற்றும் பாதுகாப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT