முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

காங்கிரஸ் எம்பிக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக..

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:17 AM
மிரட்டல் விடுத்தவர் கைது
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் 25 எம்பிக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வலதுசாரி குழுவான கார்ணி சேனாவின் செய்தித் தொடர்பாளார் ராஜ் சிங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவையில் அவைத்தலைவர் ஓம் பிர்லாவை 25 காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதையடுத்து, அனைத்து பாஜக மற்றும் காரணி சேனா தொண்டர்களும் கோபடைந்ததாக அந்த விடியோவில் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், நாங்கள் அந்த எம்பிக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை சேதப்படுத்துவோம்.

Advertisement

ராகுல் காந்தி, கவனமாகக் கேளுங்கள், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நாங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம். மக்களவையில் அவைத்தலைவரைத் தாக்கிப் பேசிய எம்.பி.க்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட வேண்டும், இல்லையெனில் ஒவ்வொறுவரையும் நாங்கள் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் இந்த விடியோ வெளியான நிலையில், போலீஸார் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தானின் கோட்டாவில் ராஜ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோட்டாவின் காவல் கண்காணிப்பாளர் தேஜஸ்வானி கௌதம் தனியார் நிறுவனத்திடம் கூறுகையில்,

குற்றம் சாட்டப்பட்டவர் போர்கேடா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடியோ தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார். விடியோவில், பிரதமர் நரேந்திர மோடியும் பிர்லாவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும் படம் ராஜ் சிங்கிற்குப் பின்னால் உள்ள சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் கார்னி சேனாவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ராஜ் சிங் மறுத்துள்ளார். வைரல் விடியோவில் காணப்படும் நபருக்கு பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பாஜக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புள்ள ஒரு ஒழுக்கமான கட்சி. இவ்வாறான நடத்தை எங்கள் சித்தாந்தம் மற்றும் தார்மீக மதிப்புகளுக்கு முற்றிலும் முரணானது என பாஜக கோட்டா நகரத் தலைவர் ராகேஷ் ஜெயின் கூறினார்.

ராஜ் சிங்குக்கு அந்தக் குழுவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மூத்த கார்னி சேனா தலைவர் ஒருவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A man who allegedly put out a video threatening to shoot Congress leader Rahul Gandhi and 25 other MPs of the opposition party was detained by police in Rajasthan's Kota on Thursday, a senior official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments