FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

Updated On : 21 ஜூலை 2026, 9:16 pm IST
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது.
பகிர்:
ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - Salman Ali
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள். - ANI
காங்கிரஸ் தலைவர்கள் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - ANI
பிரதமர் இல்லம் முன்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் கைது செய்த காவல்துறையினர். - ANI
தல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
கல்யாண் மார்க்கில் பிரதமரின் இல்லம் முன்பாக அமர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர். - ANI
போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி. - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments