ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலம்: 60 நாள்களாகக் குறைப்பு அமல்
ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் கால அளவு 60 நாள்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் கால அளவு 60 நாள்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ரயில்களில் தொலைதூரம் செல்லும் பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டுகளை 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி இருந்தது. இவ்வாறு அதிக நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவா்களில் பலா் பயணத்தை ரத்து செய்வதால் அதிக அளவில் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
இதைத் தவிா்க்க முன்பதிவை 60 நாள்களாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ரயில் பயண முன்பதிவுக்கான கால வரம்பை , 60 நாள்களாகக் குறைக்க உள்ளதாகவும், நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.
இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் அக்.31-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்த அனைத்து பயணச் சீட்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அதேசமயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான 365 நாள்களுக்கு முன்பதிவு செய்யும் வசதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.