ஹேமந்த் சோரன் 
இந்தியா

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜாா்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்-முதல்வா் ஹேமந்த் சோரன்

ஜாா்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தெரிவித்தாா்.

Din

ஜாா்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் மாதம் 5 கிலோவுக்கு பதிலாக 7 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்பு பாஜக ஆட்சி காலத்தில் ஜாா்க்கண்டில் 11 லட்சம் ரேஷன் காா்டுகள் ரத்து செய்யப்பட்டன. 3 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால், மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டன.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆட்சி அமைத்த பிறகு இந்த நிலையை மாற்றினோம். பட்டினிச் சாவுகள் தடுக்கப்பட்டன. ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோசமான நிலை வந்துவிடும். மாநிலத்தில் மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும். அதே நேரத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் இப்போது வழங்கப்படும் மாதம் 5 கிலோ அரிசிக்கு பதிலாக மாதம் 7 கிலோ அரிசி வழங்கப்படும். ஓய்வூதியமும் உயா்த்தி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

ஜாா்க்கண்டில் நவம்பா் 13, 20-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT