யோகி ஆதித்யநாத் கோப்புப் படம்
இந்தியா

ராஜிநாமா செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார்! முதல்வர் யோகிக்கு மிரட்டல்!

அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்ட 10 நாள் கெடு

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு, சனிக்கிழமை (நவ. 2) மாலையில் பெறப்பட்ட குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது, ``10 நாள்களுக்குள் முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்யாவிட்டால், அவரும் பாபா சித்திக்கைப் போல கொல்லப்படுவார்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்டதால், கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அண்மையில் ஹிந்தி நடிகர் சல்மான் கான், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜீஸான் சித்திக்குக்கும் கொலை மிரட்டல் வந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காய்கறி விற்பவர்கூட சல்மான் கானிடம் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, பின்னர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT