மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி. 
இந்தியா

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் திருச்சூா் தொகுதியில் பாஜக சாா்பில் சாா்பில் போட்டியிட்டு சுரேஷ் கோபி வெற்றி பெற்றாா். அவருக்கு மத்திய இணையமைச்சா் பதவியும் அளிக்கப்பட்டது. தோ்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் விழாவில் பங்கேற்பதற்காக சேவா பாரதி அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!

வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸில் வந்து சுரேஷ் கோபி இறங்கியுள்ளாா். மேலும், மருத்துவ அவசரப் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக காவல் துறை விசாரணையைத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது திரிச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி விளக்கமளித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT