முகப்பு
இந்தியா

உ.பி.யின் மதரஸா கல்விச் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 5 நவம்பர் 2024, 7:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் இன்று (நவ. 5) உத்தரவிட்டுள்ளது.

மேலும், மதரஸா கல்வி வாரிய சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கைத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

மதரஸா கல்வி வாரிய சட்டம் 2004, மதச்சார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் இச்சட்டத்தை மார்ச் 22ஆம் தேதி ரத்து செய்திருந்தது. மேலும், மதரஸா (முஸ்லிம் மாணவர்கள்) மாணவர்களை முறையான பள்ளிக்கல்வி முறைக்கு மாற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து மதரஸா பள்ளிகள் சார்பிலும், அப்பள்ளி ஆசிரியர்களின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்று வந்தநிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதரஸா கல்விச் சட்டம் செல்லும்

மதச்சார்பின்மையின் அடிப்படையை மதரஸா கல்வி சட்டம் மீறுவதாக அலகாபாத் நீதிமன்றம் கூறியது தவறு.

வாரியத்தின் கீழ் செயல்படும் மதரஸாக்களில் கல்வியின் தரத்தை மதரஸா கல்வி வாரிய சட்டம் ஒழுங்குப்படுத்துகிறது.

மாணவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தின் ஓர் அங்கமாக இயங்கச் செய்யும் மாநில அரசின் கடமையுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் ஒத்துப்போகிறது.

மதரஸாக்களில் 12ம் வகுப்புக்கு மேல் அளிக்கப்படும் ஃபாசில், கமில் பட்டங்கள் மட்டுமே யு.ஜி.சி சட்டங்களுடன் முரண்படுகிறது.

எனினும் மதரஸா கல்விச் சட்டம் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு உதவுகிறது. கல்வியுடன் சில மதச் சடங்குகள் கற்றுக்கொடுக்கப்படுவதால் மதரஸாக்களை அரசியலமைப்புக்குப் புறம்பானதாகக் கருத முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, மதரஸா கல்வி வாரிய சட்டத்தைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments