ராகுல் காந்தி Nand Kumar
இந்தியா

ரே பரேலியில் கல்லூரியைத் திறந்துவைத்தார் ராகுல்!

ஷாஹீத் சௌக்கில் புதிய கல்லூரியை திறந்துவைத்தார் ராகுல்..

DIN

உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலியின் ஷாஹீத் சௌக்கில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரியை காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி திறந்துவைத்தார்.

ஒரு நாள் பயணமாக ரேபரேலிக்கு வந்துள்ள ராகுல் காந்தி, இன்று காலை லக்னெள விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். ராகுல் காந்தியை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் சாலை மார்க்கமாக ரே பரேலி சென்ற ஸ்ரீ பீபாலேஷ்வர் மகாதேவ்ஜி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ரே பரேலிக்கு வந்துள்ள ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் புதிய கல்லூரியையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி, இன்று மாலை ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

SCROLL FOR NEXT